30 வகையான இட்லி (30 Type Idly)

ஒவ்வொன்றும் ஒரு சுவை 30 வகை இட்லி!நமது பாரம் பரியத்தோடு இணைந்து வந்த உணவுகளில் முதன்மை யானதுஇட்லி. பல் முளைத்த குழந்தைக்கு முதலில் ஊட்டக் கூடிய எளிய உணவுஇட்லி. கடுமையான நோய்வாய்ப்பட்டவர் களுக்குக் கூட, சீக்கிரம் செரிக்கக்கூடிய, சத்தான உணவும் கூட. அது மட்டுமல்ல... அரிசியும் பருப்பும்இருந்தால் போதும், ஊறவைத்து அரைத்து செய்து விடலாம் என்ற அளவுக்குதயாரிப்பும் சுலபம்.இவ்வளவு பெருமைகள் அடங்கிய இட்லியைக் கண்டாலே ‘‘இட்லியா?போர்-மா’’ என்று முகம் சுளித்துச் சிணுங்கும் உங்கள் செல்லங்களை ‘குஷி’யில்துள்ள வைக்க, இந்த இணைப்பில் 30 வகை ருசியான இட்லி வகை களின்செய்முறைகளை வழங்கி இருக்கிறார், ‘சமையல் திலகம்’ ரேவதி சண்முகம்.சாண்ட்விச் இட்லி, பெப்பர் இட்லி என்று சூப்பர், சூப்பர் இட்லிகளை செய்து உங்கள் வீட்டுக்குட்டீஸையும் பெரியவர்களை யும் ஆச்சர்யக் கடலில் ஆழ்த் துங்கள். விருந்தினர்களுக்கும் படைத்துவியக்க வையுங்கள்.இட்லியை மல்லிகைப்பூ மாதிரி மென்மை யாகவும் சுவையாகவும் செய்யும் வித்தை, இட்லி மாவில்தான்இருக்கிறது. அதற்கான அளவு: புழுங்கலரிசி - 2 கப், முழு உளுத்தம் பருப்பு - அரை கப், உப்பு -ருசிக்கேற்ப.அரிசியையும் பருப்பையும் தனிதனியே ஊற வைத்து, அரிசியை நைஸாகவும், உளுந்தை தண்ணீர் தெளித்துபொங்க பொங்கவும் அரைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து நன்கு அடித்து கலந்து, 6 முதல் 8 மணி நேரம்வரை புளிக்கவிடுங்கள். குறிப்பு: ஐ.ஆர்.36 ரக புழுங்கலரிசி, இட்லிக்கு நன்றாக இருக்கும்.
- கீரை இட்லி
- வெஜிடபிள் இட்லி
- கருப்பட்டி இட்லி
- தயிர் இட்லி
- பொடி இட்லி
- தாளிச்ச இட்லி
- தக்காளி இட்லி
- கொத்துமல்லி இட்லி
- இட்லி மஞ்சூரியன்
- ஃப்ரைடு இட்லி
- பெப்பர் இட்லி
- வெந்தயக்கீரை இட்லி
- அரிசி ரவை இட்லி
- காஞ்சிபுரம் இட்லி
- வெந்தய இட்லி
- அவல் இட்லி
- ரவை இட்லி
- கம்பு இட்லி
- கேழ்வரகு இட்லி
- கடலைப் பருப்பு இட்லி
- பாசிப்பருப்பு இனிப்பு இட்லி
- சாம்பார் இட்லி
- மிளகு சீரக இட்லி
- ஓட்ஸ் இட்லி
- சாண்ட்விச் இட்லி
- பலா இலை இட்லி
- கோதுமை ரவை இட்லி
- கடலைமாவு இட்லி
- ரவை-சேமியா இட்லி
- இட்லி சட்னி சாண்ட்விச்
தேடல் தொடர்பான தகவல்கள்:
30 வகையான இட்லி, 30 Type Idly, Recipies, சமையல் செய்முறை , பகுதி 1