ரவை-சேமியா இட்லி
தேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - கால் கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தக்காளிசாஸ் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்,பொடித்த மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு,எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: நெய்யைக் காயவைத்து சேமியா, ரவை இரண்டையும் வறுத்தெடுங்கள். கடாயில்எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து ரவையுடன் சேருங்கள். அத்துடன்மற்ற பொருட்களை சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில்கரைத்து, 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரவை-சேமியா இட்லி, 30 வகையான இட்லி, 30 Type Idly, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை