கடலைமாவு இட்லி
தேவையானவை: நன்கு புளித்த இட்லி மாவு - 2 கப், கடலைமாவு - முக்கால் கப், ஆப்பசோடா -ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன்,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்.மேலே தூவ: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித் தழை, தேங்காய் துருவல் - இவற்றுள்ஏதாவது ஒன்று.
செய்முறை: இட்லி மாவுடன், கடலைமாவு, ஆப்பசோடா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து மாவில் கலந்து, இட்லிகளாக ஊற்றியெடுங்கள். சூடாகஇருக்கும் போதே, விருப்பப்பட்ட துருவலை மேலே தூவிப் பரிமாறுங்கள். சாப்பிட ருசியாகஇருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலைமாவு இட்லி, 30 வகையான இட்லி, 30 Type Idly, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை