சாண்ட்விச் இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப். உள்ளே நிரப்பும் மசாலாவுக்கு: பொடியாக நறுக்கியகாய்கறிக் கலவை (விருப்பம் போல்) - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2,இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,மல்லித்தழை, கறிவேப்பிலை - தலா சிறிதளவு.தாளிக்க: கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பெரிய வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக்காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள். அதோடு வெங்காயம் சேர்த்து நன்குவதக்குங்கள். பிறகு, காய்கறிக் கலவை, தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்தூள், மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறிஇறக்குங்கள்.இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, இட்லி தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி,அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடுங்கள்.நன்கு வேகவிட்டு எடுத்துப் பரிமாறுங்கள். இந்த சாண்ட்விச் இட்லியும் ‘அப்படியே சாப்பிடலாம்’ரகம்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சாண்ட்விச் இட்லி, 30 வகையான இட்லி, 30 Type Idly, டீஸ்பூன், வெங்காயம், Recipies, சமையல் செய்முறை