கடலைப் பருப்பு இட்லி

தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், பச்சரிசி - அரை கப், தேங்காய் துருவல் - 3டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8, உப்பு - தேவையான அளவு, பெருங்காயத்தூள் - அரைடீஸ்பூன், புளிச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பு + அரிசியை ஒன்றாக ஊறவைத்து, ஒரு மணி நேரம் கழித்து,கழுவிக்கொள்ளுங்கள். கிரைண்டரில் மிளகாயை முதலில் போட்டு, சிறிது புளிச்சாறை விட்டுஅரையுங்கள். மிளகாய் அரைபட்டதும், தேங்காய், கடலைப்பருப்பு, பச்சரிசி கலவையை சேர்த்து,மீதமுள்ள புளிச்சாறையும் ஊற்றி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். பிறகு, தேவையானால்சிறிது தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளுங்கள். அரை மணி நேரம்கழித்து, எண்ணெய் தடவிய குக்கர் தட்டுகளில் மாவை ஊற்றி வேகவிடுங்கள். நன்கு வெந்ததும்எடுத்து, சிறு துண்டுகளாக்குங்கள். விருப்பப்பட்டால், கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மல்லித்தழை,தேங்காய் துருவல் தூவி சாப்பிடலாம். இந்த இட்லிக்கு சைட் டிஷ்ஷாக, உப்பு, காரம் தூக்கலாகவெங்காய சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி இருந்தால், அட்டகாசமாக இருக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடலைப் பருப்பு இட்லி, 30 வகையான இட்லி, 30 Type Idly, தேங்காய், கடலைப்பருப்பு, Recipies, சமையல் செய்முறை