கேரட் ஐஸ்கிரீம்
தேவையானவை: கேரட் - 4, பால் - 1 கப், சர்க்கரை - கால் கப், ஃபுட் கலர் பவுடர் (மஞ்சள்) -அரை சிட்டிகை, பிஸ்தா பருப்பு - 8, வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும்மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி(அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும். ஆறியதும் வெனிலாஎசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.அரை மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப்பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம்ஆனதும் எடுத்து பரிமாறலாம். குழந்தைகளைப் குஷிப்படுத்தும் இந்த ஆரஞ்சு கலர் ஐஸ்கிரீம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேரட் ஐஸ்கிரீம், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, சேர்த்து, கலர், Recipies, சமையல் செய்முறை