ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம்

தேவையானவை: வெனிலா ஐஸ்கிரீம் - தேவையான அளவு.ஜாமூன் செய்ய: கோவா - அரை கப், மைதா - அரை கப், சர்க்கரை - அரை கப், சோடா உப்பு -1 சிட்டிகை, ரீஃபைண்ட் ஆயில் - ஒன்றரை கப்.
செய்முறை: கோவாவை ஃப்ரிட்ஜில் வைத்து, கெட்டியானதும் எடுத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.அத்துடன் மைதாவைக் கலந்து பிசையவும். தண்ணீர் சேர்க்காமல் சோடா உப்பு சேர்த்து சிறுஉருண்டைகளாக உருட்டவும். சர்க்கரையில் அரை கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். (சர்க்கரைஉருகி கொதி வரும் வரை காய்ச்சினால் போதும்).பிறகு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து அதில் உருண்டைகளை பொன்னிறமாகபொரித்தெடுத்து, ஜீராவில் போடவும். குங்குமப்பூவைக் கரைத்து, அதை குலோப்ஜாமூன் +ஜீராவுடன் கலக்கவும். பிறகு எசன்ஸையும் கலந்து, குலோப்ஜாமூனுடன் ஒரு கரண்டி ஐஸ்கிரீம்சேர்த்து பரிமாறவும். வித்தியாசமான ‘ஜில்’ ஸ்வீட்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஹாட் ஜாமூன் வித் ஐஸ்கிரீம், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை