வெஜிடபிள்-ஃப்ரூட்ஸ் ராய்த்தா

தேவையானவை: வெள்ளரிக்காய் - 1, கேரட் - 1, பெரிய வெங்காயம் - பாதி, விதையில்லாதபச்சை திராட்சை - 10, அன்னாசிப்பழம் - 1 கீற்று, தக்காளி - 1, ஆப்பிள் - 1 துண்டு, மாதுளைமுத்துக்கள் - டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, தயிர் - 3 கப், பச்சை மிளகாய் - 2,பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டீஸ்பூன், தோல் நீக்கி, வறுத்த நிலக்கடலை - 2 டீஸ்பூன்.
செய்முறை: வெள்ளரி, கேரட், வெங்காயம், அன்னாசி, ஆப்பிள் இவற்றின் தோலை நீக்கிபொடியாக நறுக்கவும். அதில் உப்பு சேர்த்து பிசறவும். பச்சை மிளகாய், மல்லித்தழையைபொடியாக நறுக்கி அத்துடன் கலக்கவும். தக்காளியையும் சிறு துண்டுகளாக்கி சேர்க்கவும். திராட்சை,மாதுளை முத்துக்களை சேர்த்து பின் தயிரைக் கலந்து, வறுத்த நிலக்கடலையை கரகரவெனபொடித்து தூவி பரிமாறவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெஜிடபிள்-ஃப்ரூட்ஸ் ராய்த்தா, 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை