மில்க் அவல்
தேவையானவை: கெட்டி அவல் - அரை கப், பால் - ஒன்றரை கப், சர்க்கரை - கால் கப்,முந்திரிப்பருப்பு - 3, உலர்திராட்சை - 10, வெனிலா எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - 5சொட்டு.
செய்முறை: அவலை சுத்தம் செய்து, தண்ணீரில் ஊறவைத்து பிழிந்தெடுக்கவும். பாலில் சர்க்கரைசேர்த்து காய்ச்சவும். ஒடித்த முந்திரி, உலர்திராட்சையை நெய்யில் சிவக்க வறுத்தெடுக்கவும்.அவலையும் பாலையும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கிளறி, கெட்டியானதும் வறுத்தவற்றையும்எசன்ஸையும் சேர்த்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஃப்ரிட்ஜில் வைத்தும், ‘ஜில்’லெனப்பரிமாறலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மில்க் அவல், 30 வகையான ஐஸ்-டிஷ், 30 Type Ice Dishes, , Recipies, சமையல் செய்முறை