நாரத்தம்பழ சாதம்

தேவையானவை: பச்சரிசி - 2 கப், நாரத்தம்பழம் - 1, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - அரைடீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு.தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் - 2, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 4டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை சிறிது உப்பு சேர்த்து உதிராக வடியுங்கள். சூடாக உள்ள சாதத்தை ஒரு தட்டில் கொட்டிஅதன் நடுவில் மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து மூடுங்கள். பழத்தை பிழிந்து ஜூஸ்எடுத்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்குங்கள். எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, இஞ்சி, மிளகாய் கறிவேப்பிலை தாளித்துசாதத்தில் சேருங்கள். தேவையான உப்பு, நாரத்தம்பழச் சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நாரத்தம்பழ சாதம், 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து, மிளகாய், உப்பு, சிறிது, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை