மாம்பழ மோர் குழம்பு
தேவையானவை: புளிக்காத தயிர் - 1 கப், இனிப்பான மாம்பழம் - 1 (நடுத்தர சைஸ்), கடலை மாவு - 1டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.அரைக்க: தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, சீரகம் -அரை டீஸ்பூன்.தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: தயிருடன் உப்பு, பெருங்காயத்தூள், அரை கப் தண்ணீர், மஞ்சள் தூள், கடலை மாவு சேர்த்துநன்கு கடைந்துகொள்ளுங்கள். மாம்பழத்தை தோல், கொட்டை நீக்கி கையால் லேசாக பிசைந்து தயிருடன்சேருங்கள். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து அதனுடன் சேருங்கள். எண்ணெயைக்காய வைத்து கடுகு தாளித்து மோர், மாம்பழ கரைசலை சேர்த்து கொதி வந்ததும் இறக்குங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாம்பழ மோர் குழம்பு, 30 வகையான பழ உணவுகள், 30 Type Fruit Dishes, டீஸ்பூன், Recipies, சமையல் செய்முறை