அழகர் கோயில் தோசை
தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், பச்சரிசி - 1 கப், தோல் உளுந்து அல்லது வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 கப், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் -தேவையான அளவு.
செய்முறை: புழுங்கலரிசியையும், பருப்பையும் தனித்தனியாக கழுவி ஊறவைத்து தோசை மாவு போல் ஆட்டிஎடுக்கவும். பச்சரிசியை கழுவி நீர் வடியவிட்டு மிக்ஸியில் திரித்து சலிக்கவும். மிளகு, உப்பு, காய்ந்த மிளகாய்ஆகியவற்றை விழுதாக அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைத்து மறுநாள் தோசைகளாக ஊற்றிஎடுக்கவும். தனியாக சாப்பிடுவதற்கு மிகவும் ருசியானது. இது அழகர் கோயிலில் கிடைக்கும் ஸ்பெஷல்தோசை. ஆனால், அங்கே மாவைக் கெட்டியாக பிசைந்து, சிறிய அடைகளாகத் தட்டி, எண்ணெயில்பொரித்தெடுப்பார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழகர் கோயில் தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, , Recipies, சமையல் செய்முறை