தேங்காய் தோசை
தேவையானவை: பச்சரிசி - 1 கப், உளுத்தம்பருப்பு - கால் கப்புக்கு சற்று குறைய, தேங்காய் (துருவியது) -கால் மூடி, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி + பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, தேங்காய் + உப்பு சேர்த்து நன்றாக ஆட்டிவைக்கவும். 10 மணி நேரத்திற்கு பின் (சிறிது பொங்கியதும்) தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.இந்த தோசைக்கு காய்ந்த மிளகாய் - 8, பூண்டு - 2 பல், புளி - 3 சுளை, உப்பு சேர்த்து பச்சையாகஅரைத்து, பின் வாணலியில் 4 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு + பெருங்காயம் தாளித்து,அரைத்த சட்னியில் சூட்டுடன் விட்டு பரிமாறவும். மாலை நேரத்துக்கு ஏற்ற ருசியான சிற்றுண்டி இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தேங்காய் தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, உப்பு, Recipies, சமையல் செய்முறை