மரக்கறிக்காய் தோசை
தேவையானவை: பச்சரிசி - 3 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 1 கப், பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்,கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 8, சோம்பு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், உப்பு -தேவைக்கேற்ப, தேங்காய் (துருவியது) - கால் மூடி, சின்ன வெங்காயம் - அரை கப், எண்ணெய் - ஒன்றரைகப்.
செய்முறை: மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு மூன்றையும் விழுதாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தைபொடியாக நறுக்கவும். அரிசி, பருப்பு வகைகளை முதல் நாள் இரவு கழுவி ஊறவைத்து, மறுநாள் காலையில்சற்று கரகரப்பாக அரைக்கவும். அதில் சின்ன வெங்காயம், துருவிய தேங்காய், அரைத்த மிளகாய் விழுதுஆகியவற்றை கலந்து அடைமாவு பக்குவத்தில் வைத்துக் கொள்ளவும்.பின்னர் அதை தோசைக்கல்லில் சிறு ஊத்தப்பங்களாக ஊற்றி, வேகும் முன் திருப்பிவிட்டு அரை வேக்காடாகஎடுக்கவும். பின்னர் வாணலியில் பொரிக்கத் தேவையான எண்ணெய் விட்டு சூடானதும், இந்தஊத்தப்பங்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக சிவந்து மொறுமொறுவென வெந்ததும் எடுக்கவும். சூடானமரக்கறிக்காய் தோசை ரெடி. செட்டிநாட்டின் பிரபல மான பலகாரங்களில் இதுவும் ஒன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மரக்கறிக்காய் தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, சின்ன, கால், மிளகாய், Recipies, சமையல் செய்முறை