ஆலு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - அரை டீஸ்பூன்,எண்ணெய் - நெய் கலவை - தேவையான அளவு.பூரணத்துக்கு: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒன்றரை கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - அரை டீஸ்பூன், மாங்காய்தூள் - ஒன்றரை டீஸ்பூன்,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு.
செய்முறை: பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப்பிசைந்துகொள்ளுங்கள் (அடுப்பில் வைத்துக் கிளறத் தேவையில்லை).கோதுமை மாவை, நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, கிண்ணங்களாக செய்து நடுவே பூரணம்வைத்து சப்பாத்திகளாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் - நெய் சேர்த்துவேகவிடுங்கள். உப்பு, புளிப்பு, உறைப்பு என மூன்று சுவையும் சேர்ந்து, சூப்பராக இருக்கும் இந்தசப்பாத்தி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆலு சப்பாத்தி, 30 வகையான சப்பாத்தி, 30 Type Chappathi, டீஸ்பூன், உப்பு, நெய், Recipies, சமையல் செய்முறை