இனிப்பு போண்டா

தேவையானவை: ரவை - முக்கால் கப், பச்சரிசி மாவு - கால் கப், பொடித்த வெல்லம் - 1 கப், உப்பு - ஒருசிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ரவையை சிறிது தண்ணீர் தெளித்து பிசறி, நன்கு அழுத்திவிட்டு ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.ஆட்டுக்கல்லில் போட்டு, நன்கு கெட்டியாக அரையுங்கள். பின்னர் அதனுடன் வெல்லத்தூள் சேர்த்துஅரையுங்கள். நன்கு அரைபட்டதும் பச்சரிசி மாவைத் தூவி, இரண்டு நிமிடம் ஆட்டியெடுங்கள். எண்ணெயைநிதானமான தீயில் காயவைத்து, சிறு சிறு போண்டாக்களாக போட்டு, வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். மாவுஇளக்கமாக இருந்தால் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி, வேக வைத்தெடுங்கள். (வெல்லத்துக்கு பதில்சர்க்கரையும் சேர்க்கலாம்).
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இனிப்பு போண்டா, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, சிறு, நன்கு, Recipies, சமையல் செய்முறை