வெங்காய வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் (அல்லது பெரிய வெங்காயம்) - அரை கப், கறிவேப்பிலை - சிறிது, பச்சை மிளகாய் - 2, இஞ்சி- 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் ஆட்டுக்கல்லில் போட்டுநன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். காயும் எண்ணெயில் (நடுத்தர தீ) சிறு சிறுவடைகளாக போட்டு, பொன்னிற மானதும் எடுத்துப் பரிமாறுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வெங்காய வடை, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, , Recipies, சமையல் செய்முறை