ஜீரா வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒருசிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து நன்குநைஸாக அரையுங்கள். மாவு மெத்தென்று இருக்க வேண்டும். உப்பு சேர்த்து ஒரு ஆட்டு ஆட்டி எடுங்கள்.சர்க்கரையை கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்து கொதித்ததும் இறக்கி, ஏலக்காய்தூள்சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து மாவை சிறு சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்துசர்க்கரை பாகில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுங்கள். இதே போல எல்லா மாவையும் செய்து,பரிமாறுங்கள். குழந்தைகளைக் கவரும் வடை இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜீரா வடை, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, , Recipies, சமையல் செய்முறை