புதினா - மல்லி வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - முக்கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், துவரம்பருப்பு - கால் கப்,புதினா - அரை கட்டு, மல்லித்தழை - அரை கட்டு, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, உப்பு -ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்புகளை ஒன்றாக ஊற வையுங்கள். மல்லித்தழை, புதினாவை அலசி மிகவும் பொடியாகநறுக்குங்கள். ஊறிய பருப்பை, தண்ணீரை வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பச்சை மிளகாய்,இஞ்சி சேர்த்து அதில் நறுக்கிய புதினா, மல்லித்தழை, உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து சற்று மெல்லியவடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் கொள்ளுமளவு போட்டு நடுத்தர தீயில் நன்கு வேக விட்டு எடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புதினா - மல்லி வடை, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, மல்லித்தழை, Recipies, சமையல் செய்முறை