கார்ன் போண்டா
தேவையானவை: சோளம் - 2, மைதா - 2 டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாகநறுக்கிய வெங்காயம் - அரை கப், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 3, எலுமிச்சம்பழச் சாறு - 1டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு - ருசியான, எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை: சோளத்தை வேகவைத்து, உதிர்த்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ளுங்கள். இஞ்சி,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைத்த சோளத்துடன் மைதா, கார்ன்ஃப்ளார்,வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து,கலந்துவைத்த கலவையை சிறுசிறு போண்டாக்களாக கிள்ளிப்போட்டு, பொன்னிறமானதும் எடுத்து, சூடாகப்பரிமாறுங்கள். கண்ணிமைப்பதற்குள் பறந்துவிடும் இந்த கார்ன் போண்டா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார்ன் போண்டா, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, பச்சை, இஞ்சி, Recipies, சமையல் செய்முறை