மரியாதைக்குரிய முதல் நபர்
உலகத்திலேயே மரியாதை தரும் முதல் நபர் யார்?... என்று கேட்டால்...
பொதுவாகவே அலுவலகத்தில் உள்ள நபர்கள், தோழிகள், தோழர்கள், வி.ஐ.பி.க்கள், நிபுணர்கள்னு ஏதாவது ஒரு சராசரியாய் பதில் வரும். அனைவரிடம் இருந்தும்.
பசங்க! என்று சொன்னால் அது நிச்சயமாய் வித்தியாசமான பதில் தான்.
பசங்களா? நான் அவங்களைப் பத்திக் கேட்கலே. மரியாதை தரும் நபர் (வி.ஐ.பிக்களை) கேட்டேன்! என்று கேள்வியை மறுபடியும் விளக்கமாகக் கேட்டாலும் அதே வித்தியாசமான பதில் வந்தால்...
இந்த அத்தனை வரிசையிலும் கூட எங்கள் குழந்தைகளை முதலில் மதிக்கிறோம்! என்ற பதில் மறுபடியும் வந்தால்...
என்ன? பசங்க மேல நாம பாசம் வைக்கலாம். ஆனா மரியாதைங்கிறது வேற...! சரி. எதனால பசங்க மேல மரியாதை வச்சிருக்கனும்.
நம் பசங்களிடம் பாசம் வைப்பதற்கு நாம் புதிதாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. அது இயல்பாகவே நமக்குள் இருக்கும் விஷயம். மரியாதை என்பது அவர்களிடம் நாம் உண்மையாக நடந்து கொள்ள முயற்சி செய்வது என்பதாகும். எடுத்துக்காட்டாக...
ஒரு வீட்டின் குடும்பத் தலைவர் பி.டபிள்யு.டி.யில் வேலை செய்தார். அவர் அரசு அலுவலகத்தில் வேலை செய்தபடியே சைடில் ரியல் எஸ்டேட் பிஸினஸ•ம் செய்து வந்தார்.
பெரும்பாலான நாட்கள் அலுவலகம் போய் கையெழுத்து போட்டுவிட்டு அப்படியே கிளம்பி வெளியே தன் சொந்த வேலையாகப் போய் விடுவார். அலுவலகத்திலிருந்து போன் வந்தால் என்ன சொல்லவேண்டும் என்று மனைவியிடம் சொல்லி வைப்பார். பணம் கடன் தந்த குறிப்பிட்ட சில நண்பர்கள் வந்தால் வீட்டுக்குள் இருந்தபடியே இல்லை என்று பசங்களை விட்டு சொல்லச் சொல்வார்.
இந்தச் சமயத்தில் தான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த அவர்கள் மகன் கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஸ்கூலுக்கே வராமல் போனதாக கடும் ரிப்போர்ட் வந்தது ஸ்கூலிருந்து!
வீட்டுக்கு வந்த குடும்பத் தலைவர் செய்தி கேட்டு மகனை வீசி விளாறி விட்டார்.
நண்பர்களோடு சுற்றிக் கொண்டு மார்க்ஷ“ட்டையும் வீட்டில் காட்டாமல் தானே அப்பா போல் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்திருக்கிறான் அந்தப் பையன்.
அன்று அப்பாவிடம் அடி வாங்கிய அந்தப் பையன். மறுபடி மறுபடி அதே விஷயத்துக்கு அடிவாங்கினான். அவன் பள்ளிப் படிப்பும் நின்று போனது.
தன் குழந்தையின் இத்தனை தவறுகளுக்கும் தானே தான் காரணம் என்று அந்த அப்பாவுக்கு இன்னும் கூட புரியவே இல்லை.
குழந்தைகள் எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்று கற்றுக் கொள்வதற்கு பெரும்பாலும் பெற்றோர்களே தான் ரோல் மாடல்களாக இருக்கிறார்கள் குழந்தைகளோடு அதிகமான நேரம் பக்கத்திலேயே இருப்பது அவர்கள் தான்.
சின்னச் சின்னதாகவோ, பெரிதாகவோ பொய் சொல்லும் பெற்றோரை தன் தினசரி வாழ்வில் பார்த்துப் பார்த்து வளரும் குழந்தை பொய் ஒரு பெரிய தவறில்லை..! என்ற எண்ணத்துடனேயே தான் வளர ஆரம்பிக்கிறது.
ஒரு வேளை அப்படிப் பொய் பேசுவது தவறு என்று அந்தக் குழந்தை தன் ஆசிரியர் மூலமோ, நண்பர்கள் மூலமோ உணர்ந்து கொண்டாலும், அதை உணர்ந்த பின், அதற்கு அப்படி பொய் சொல்லும் அல்லது விஷயங்களை ஓவராக பெரிதுபடுத்திச் சொல்லும் தன் தந்தை, தாய் பேரில் இருக்கும் மரியாதை போய் விடுகிறது!
பெற்றோரின் மீதிருக்கும் மரியாதை போய்விட்டால் குழந்தை, பெற்றோரின் வார்த்தைகளையும் கேட்பதில்லை.
என்ன பேச்சுப் பேசறான் பார்... பெத்தவன்னு ஒரு மரியாதை இருக்கா... என்று வெறுமனே கத்தி பிரயோசனமில்லை.
ஆனால் எனக்கு நீ மரியாதை குடு... நான் இந்தக் குடும்பத் தலைவன் என்று குழந்தைகளிடம் மரியாதையை கேட்டுத்தான் இன்று பல பெற்றோர்கள் பெறும் நிலையில் இருக்கிறார்கள்.
அந்தக் குழந்தையின் மனதில் ஏதோ ஒரு விதத்தில் தங்களது மரியாதை குறைந்து போயிருக்கிறது என்று தான் இதற்கு அர்த்தமாக எடுத்துக் கொண்டு அதை அவர்கள் சரிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
ஏற்கெனவே சொன்னது போல நாம் நமது பிள்ளைகளுக்குக் காட்டும் மரியாதை என்பது அவர்களுக்கு உண்மையாக இருப்பதுதான். அதுவே அவர்கள் நல்லவர்களாக உருவாவதற்கும், நல்லவர்களாக இருப்பதற்கும் நாம் எடுக்கும் முதல் ஸ்டெப்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
மரியாதைக்குரிய முதல் நபர், மரியாதை, தான், நாம், பதில், வந்தால், பொய், சொல்லும், குழந்தை, என்ன, பசங்க, குடும்பத், போய், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி