நல்ல பழக்க வழக்கங்கள்...
- டாக்டர். நிகிலா ஷர்மா
குழந்தைகள் நல்ல பழக்க வழங்கங்களோடு நடந்து கொண்டால் பெற்றோருக்கு பெருமைதானே! கழிவறையைப் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்பட்ட குழந்தைகள், முக்கியமான நேரங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழித்து பெற்றோருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தாது. குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிவறை பயிற்சியை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமை.
கறைபடிந்த கழிவறை, போதிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டமில்லாத சூழ்நிலை, கழிவறையை பயன்படுத்திய பிறகு சரியாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யாதது போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு கழிவறைக்கு செல்வது என்றாலே பயம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினையை தீர்க்க கொஞ்சம் சிந்தனை செய்தால் போதும். குழந்தை எதையாவது பிடித்துக் கொண்டு உட்கார ஆரம்பித்த உடனேயே (வழக்கமாக பிறந்து 10-வது மாதத்தில்) கழிவறையை பயன்படுத்த பழக்கலாம்.
குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் சுகாதாரமான பாத்ரூம், பாதுகாப்பான நுண்ணுயிரி தாக்காத டாய்லெட்டுகள், கறை படியாத கழிவறைச் சாதனங்கள் கிடைக்கின்றன. இதனால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா பாதிப்பு ஏற்படுவதில்லை.
குழந்தைகளுக்கு கழிவறை பயிற்சியை, நகைச்சுவை உணவோடும், சூழ்நிலைக்கு ஏற்பவும் கற்றுத்தர வேண்டும். மற்ற குழந்தைகள் கழிவறையை பயன்படுத்துவதையும், குழந்தைகளுக்கான கழிவறை டப்பில் குழந்தைகள் உட்கார்ந்திருப் பதையும் படத்தில் காட்டி விளக்கலாம்.
கழிவறைக்கு சென்று வந்த பிறகு சுத்தமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறையும் கழிவறையை பயன்படுத்திய பிறகு, கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டியதன் அவசியத்தை விளக்க வேண்டும். அதேபோல், சாப்பிடுவதற்கும் முன்பு, கைகளைக் கழுவ வேண்டியதன் அவசியத்தையும், கழிவறை, அழுக்கு துவாலை, தூசி படிந்த கதவின் கைப்பிடி போன்ற சுத்தமில்லாத பொருட்களில் இருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தையும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில், குழந்தையுடன் கூடவே சென்று கழிவறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும், அதன்பின் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
சுகாதார முறையை சரியாக பழகிக் கொள்ளாத குழந்தைகளுக்குத்தான் அடிக்கடி கேஸ்ட்ரோ என்ட்ரட்டீஸ், டைஃபாய்டு, தோல் நோய் போன்றவை ஏற்படுகிறது. பொது இடங்களில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். எனவே கழிவறையை பயன்படுத்த பயிற்சி அளிப்பது அத்தியாவசியமான தேவையாகிறது. இது பொது இடங்களில் தர்மசங்கடத்தில் இருந்து பெற்றோரை காப்பாற்றி அவர்களுடைய டென்ஷனையும் குறைக்கவும் பயன்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நல்ல பழக்க வழக்கங்கள்..., வேண்டும், கழிவறையை, குழந்தைகளுக்கு, குழந்தைகள், கழிவறை, வேண்டியதன், பயன்படுத்த, என்பதையும், பிறகு, அவசியத்தையும், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி