குழந்தை ஏன் திருடுகிறது?
மற்றவர்களால் நிராகரிக்கப் படுகிற, அன்பு கிடைக்காத குழந்தைகளுக்கே பெரும்பாலும் இப்பழக்கம் வருகிறது
குழந்தை ஆசைப்படுகிற நியாயமான விஷயங்கள் கூட கிடைக்காத பட்சத்தில் திருடுகிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
எப்படி சமாளிப்பது...?
குழந்தையைத் திருத்த வேண்டியது பெற்றோரின் கடமை தான். அதற்காகக் குழந்தையிடம் அளவுக்கு மீறி நடந்து கொள்ளக் கூடாது. அதிகபட்ச தண்டனையெல்லாம் கூடாது. பொறுமையாக அதற்கு விளக்க வேண்டும்.
தெரியாமல் செய்கிற விஷயம் தான் இது. எனவே குழந்தையைப் பலர் முன்னிலையில் திருடன் என்றெல்லாம் அழைக்கக் கூடாது. மற்றவர் பொருட்களை எடுப்பது எத்தனை பெரிய குற்றம் என எடுத்துச் சொல்லிப்
புரிய வைக்க வேண்டும். அப்படியே எடுத்து விட்ட போதிலும், மன்னிப்பு கேட்டு, அதை சம்பந்தப்பட்டவரிடமே திருப்பிக் கொடுக்கப் பழக்க வேண்டும்.
குழந்தை திருடுவதைத் தவிர்க்க, அது கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கவும் கூடாது. நினைத்ததை சாதித்துக் கொள்ள அது இதை ஒரு டெக்னிக்காக நினைக்கும்.
குழந்தையை நிறைய நேசியுங்கள். முழுமையான அன்பைக் கொடுங்கள்.
எதுவுமே பலனளிக்காத பட்சத்தில் குழந்தை மன நல நிபுணரிடம் கலந்தாலோசியுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழந்தை ஏன் திருடுகிறது?, கூடாது, வேண்டும், குழந்தை, Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி