இதுல இவ்ளோ விஷயமா?
குழந்தைகளுக்கு பொதுவாக 6 வயது முதல் 13 வயதுக்குள் தான் பால் பற்கள் விழுந்து, நிலையான பற்கள் முளைக்கின்றன.
6 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு பால் பல்லை பிடுங்கினால் மட்டும் மீண்டும் முளைக்கும். நிலையான பற்களை பிடுங்கி விட்டால் முளைக்காது...
சிலருக்கு 40-50 வயதில் கூட அபூர்வமாய் பல் முளைக்கலாம். இதனை ஞானப்பல் என செல்லமாய் அழைக்கின்றனர்.
பல்லின் மேற்பகுதியை சிகரம் என்றும் கீழ் பகுதியை வேர் என்றும் அழைக்கிறார்கள்.
சில பால் பற்கள் கீழே விழாமல் அப்படியே நிலைத்து விடும். ஆனால் இந்த பற்களின் மூலம் நிலையான பற்களைப் போல் கடிக்க இயலாது.
இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் தைராய்டு வியாதிகளுக்கும் பற்களுக்கும் சம்பந்தம் உண்டு. இந்த வியாதிகளின் தாக்கம் ஜாஸ்தி இருக்கும் போது பற்களை பிடுங்க மாட்டார்கள்.
பற்கள் நன்றாக வளர கால்சியம் மாத்திரைகளை சாப்பிட வேண்டும் எனக் கூறுவர். ஆனால் கால்சியத்தால் குழந்தைகளுக்கு மட்டுமே பலன்...
வாயில் பற்களில் விழும் ஓட்டையை அடைக்க 6-7 விதமான சிமெண்டுகளை பயன்படுத்துகின்றனர். தேவைக்கு ஏற்ப இந்த சிமெண்ட் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தங்கம், வெள்ளி, குரோமியம், கோபால்ட், மற்றும் எவர்சில்வரில் கூட இன்று பற்கள் கட்டிக் கொள்கின்றனர். தங்கத்தால் பல் கட்டிக் கொண்டாலும் ஜாக்கிரதையாக கடிப்பதே நல்லது.
பற்களிடம் ஏற்படும் கரைகளை அவ்வப் போது பல் டாக்டரிடம் காட்டி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிகமாய் படிந்தால் அதன் மூலமே துர்நாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
உதட்டுப் பிளவு... ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு எற்பட வாய்ப்பு உண்டு.
ரத்தம் உறையாத நோய் உள்ளவர்களுக்கு பல் பிடுங்க யோசிப்பர். மீறி பிடுங்கினால் இரத்தம் ஒழுகிக் கொண்டேயிருக்கும்.
உடம்பில் கட்டுப் படுத்த இயலாத நிலையில் எந்த வியாதி இருந்தாலும் அந்த சமயத்தில் பல்லை எடுக்க மாட்டார்கள்...
பொய் பற்களை பீங்கான் மற்றும் அக்ரெலிக் ரெஸின் என்ற பிளாஸ்டிக் ரெஸினால் தயாரிக்கிறார்கள்.
பொய்ப்பல் வைத்திருப்பவர்கள் இரவு கழட்டி வைத்து விடுவது நல்லது. இரவு அவற்றை தண்ணீரில் போட்டு வைத்திருக்க வேண்டும். 5 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதுல இவ்ளோ விஷயமா?, பற்கள், வேண்டும், நல்லது, உண்டு, நிலையான, பால், குழந்தைகளுக்கு, பற்களை, Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி