தாயின் கவனத்திற்கு...

உங்களுடைய கர்ப்ப காலத்தில் இயக்குநீர் (Hormone) மாற்றங்களால் உங்களுக்கு பல் ஈறுகள் வீங்கலாம். இதனை ப்ரக்னன்ஸி ட்யூமர் என்பார்கள். மற்ற கட்டிகளுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மகப்பேறு மருத்துவர் ஆலோசனையுடன் இதுபோன்ற கட்டிகளை அகற்றுதல், பல் எடுத்தல், பல் சுத்தம் செய்தல், பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகளை செய்து கொள்ளலாம். ஆனால் இவற்றை எல்லாம் கருவுற்ற 5-8 மாதங்களில் முடித்துக் கொண்டுவிட வேண்டும். இரத்தக் கொதிப்பு, நீரிழிவு உள்ள கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் பற்சிகிச்சைகளை தள்ளிப் போடுவது நல்லது.
நாட்டுப்புறப் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்காமல் சதை மூடிக்கொண்டிருக்கும் போது நெல்மணி கொண்டு கீறினால் பல் வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். குழந்தையின் தாய்மாமனைக் கொண்டு அவ்விதம் கீறவும் செய்கிறார்கள். அது தவறு, நெல்மணி தூய்மையானது என்று சொல்ல முடியாது. அதில் கிருமிகள் இருக்கலாம். அதன் வழியாக காயத்திலும், பின்னர் இரத்தத்திலும் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் நுழைய வாய்ப்பு இருக்கிறது. பல் டாக்டர் மரப்பு மருந்து அல்லது மரப்பு ஊசி போட்டு குழந்தைக்கு வலி இல்லாமல் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கருவி மூலம் கீறிவிடுவார்.
குழந்தையின் பற்கள் மஞ்சள் அல்லது வேறு நிறத்தில் இருந்தால் பயப்பட வேண்டாம். நீங்கள் கர்ப்ப காலத்தில் டெட்ரா சைகிளின் மாத்திரைகள் சாப்பிட்டிருந்தால் குழந்தையின் பற்கள் மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் இருக்கும். வளரும் பருவத்தில் அம்மை, டைபாய்டு தாக்கினால் பற்கள் கருநீல நிறமடைவது உண்டு. நிறம் மாறிய பற்களுக்கு நிரந்தர நிவாரணமாக பல் வைத்தியத்தில் அநேக சிகிச்சை முறைகள் வந்தாயிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாயின் கவனத்திற்கு..., பற்கள், குழந்தையின், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி