உங்களது கனவு ...

உங்கள் குழந்தையைப் பற்றி எப்படி கனவு காண்கின்றீர்களோ அப்படியே அவன் ஆகிவிட்டான் என்ற உணர்வோடு செயல்படுங்கள். தன் பிள்ளைக்குக் கிடைக்கும் ஒவ்வொரு உயர்வையும் தாய் கேட்கின்ற போது தன்னையும் அறியாமல் தன் அடி வயிற்றைத் தொட்டு ''தன் வயிறு மணி வயிறு'' என்று உள்ளம் பூரித்துப் போகின்றாள்.
நீங்கள் உங்களின் உறவுக்கும் நட்புக்கும் குறிப்பாக உங்கள் அன்னை தந்தையர்களிடம் எப்படி நடந்து கொள்கின்றீர்களோ அவற்றை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றான் உங்கள் பிள்ளை. அதே செயல்கள் உங்களுக்கு அவன் மூலமாகத் திரும்ப வாய்ப்பு உள்ளது. என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். வயதான உங்களது அன்னை தந்தையை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் அதே நிலை உங்கள் மகனால் உங்களுக்குப் பின்னாளில் வந்து சேரலாம்.
உங்கள் மகன் ஹீரோவாக உருவாக வேண்டுமானால் நீங்கள் நல்லது செய்யுங்கள். நல்லன பேசுங்கள் - நல்லவர்களோடு உறவு வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் ஹீரோவாக இருந்து காட்டுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உங்களது கனவு ..., உங்கள், நீங்கள், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி