தந்தை-சிறந்த ஆசிரியர்
கல்விக் கூடங்களோ புத்தகங்களோ உங்களது மகனுக்குத் தேவையான அனைத்து வாழ்க்கைக் கல்வியைத் தரமுடியாது என்பதற்காகத்தான் இறைவன் தந்தையாகிய உங்களைப் படைத்துள்ளான். உங்களது மகனுக்கு நீங்கள் தந்தையாக இருப்பதற்காக பெருமிதம் கொள்ளுங்கள். பேரானந்தமடையுங்கள். அவனது வளர்ச்சிக்காக தினமும் ஒரு அரை மணி நேரம் ஒதுக்குங்கள். உரிய நாளில் உலகம் போற்றும் வகையில் உயர்ந்துவிடுவான்.
அவன் எப்படிப்பட்ட குணங்களில் சிறப்படைய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அப்படியே நீங்கள் இருக்க முயலுங்கள். அதற்கான வழிவகைகளை கண்டறிந்து சொல்லுங்கள். உங்களைவிட சிறந்த வழிகாட்டி அவனுக்கு வேறு யாரும் இருக்க முடியாது. அவனுக்குச் சரியான வழி காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் நீங்கள் படைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
உங்கள் குழந்தைக்கு வேண்டிய அனைத்துப் பயிற்சிகள் தரத்தான் உங்களை ஆண்டவன் அனுப்பி வைத்திருக்கின்றான். எனவே உங்கள் குழந்தைக்கு நல்ல பயிற்சி அளிக்க வேண்டியது உங்களின் மாபெரும் பொறுப்பு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தந்தை-சிறந்த ஆசிரியர், நீங்கள், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி