குழந்தைகளின் உணவு முறைகள்...
குழந்தைகள் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் அதிகமாக சாப்பிட வேண்டும். அதன்மூலம் டீன் ஏஜ் பருவத்தில் அவர்களுக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள். குழந்தைகள் கண்டபடி எடை போடுவதை தடுக்க இதே உணவு முறைகளை அவசியம் கடைப் பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் சத்துள்ள ஆகாரங்களை சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் அமையும் என்று அனைவரும் அறிந்த விஷயம் தான் என்றாலும், அத்தகைய உணவுகளால் பின்னாளில் உயர் ரத்த அழுத்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க இயலும் என்பது புதிய செய்தி. சிறிய வயதிலேயே தேவையான அளவுக்கு காய்கறிகள், பழங்களை சாப்பிடும் குழந்தைகளுக்கு வயது வந்த பருவத்தில் இதயம் சம்பந்தமான ஆபத்தான நோய்கள் உண்டாவது தடுக்கப்படும். உடல் எடை கட்டுக்குள் இருக்கும் என்பதால் நீரழிவு ஆபத்தும் வராது.
குழந்தைகளின் உணவில் உப்புச் சத்து அதிகமாக இருப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொழுப்பு இல்லாத, குறைந்த கொழுப்பு கொண்ட பண்ணை உணவுகள், பதப்படுத்தப்பட்ட கொழுப்பு, சர்க்கரை மதுபானம், உப்பு ஆகியவற்றை குறைவாக எடுத்துக் கொள்வது, போதிய உடற்பயிற்சி என வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டால் குழந்தைகள், அந்தப் பருவத்தில் மட்டுமில்லாமல், வளர்ந்த பருவத்திலும் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழந்தைகளின் உணவு முறைகள்..., குழந்தைகள், கொழுப்பு, பருவத்தில், வேண்டும், காய்கறிகள், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி