குடும்பம் - பல்கலைக்கழகம்

''தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்''.
இப்படித் தன் மகன் அனைத்துத் துறையிலும் சிறந்தவனாக வாகை சூடி அவனி போற்றும் வகையில் பவனி வர வேண்டும் என்று ஆசைப்படும் தந்தையர்கள் வெறுமனே ஆசைப்படுவதோடு விட்டுவிடாமல் ஆக்கப் பூர்வமான
செயலில் இறங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குடும்பம் ''நல்லதொரு பல்கலைக்கழகமாக'' அமையும்.
குழந்தைகள் நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்பதையெல்லாம் தெரியாத நிலையில்தான் இந்த உலகிற்கு வருகின்றனர்.பெற்றோர்கள் தான் அவர்களுக்கு அனைத்தையும் கற்றுத் தரும் நிலையில் இருக்கின்றார்கள்.
உங்களது பிள்ளை உங்களது சொத்தோ கடனோ-எதுவாயினும் 70% உங்களையே நம்பியுள்ளார்கள்! 30 அதிர்ஷ்டத்தையும் சூழ்நிலையையும் நம்பியுள்ளனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடும்பம் - பல்கலைக்கழகம், , Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி