உங்கள் குழந்தை எப்படி?

குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. வளரும் நிலையிலேயே குழந்தைகளின் இயல்பான குணம் ஓரளவுக்கு தெரிந்துவிடும். என்றாலும் அதற்கு மேல் பெற்றோரின் கவனமும் அக்கறையும் தான் குழந்தையை சரியான கோணத்தில் வளர்க்க உதவுகிறது.
பெற்றோர் எப்படி நடந்து கொண்டால் நல்ல குழந்தைகள் கிடைப்பார்கள்?
உங்கள் குழந்தையின் ஆர்வமும் உங்கள் ரசனையும் பல நேரங்களில் மாறுபடலாம். என்றாலும் குழந்தையின் ரசனை என்ன என்பதை காது கொடுத்து கேளுங்கள். அதில் நியாயம் இருந்தால் அதை ஊக்குவிக்கும் விதமாக பேசி உற்சாகப்படுத்துங்கள்.
குழந்தைக்கு உரிய தனித் தன்மை வெளிப்படும்போது அந்த திறமையை பாராட்டத் தவறாதீர்கள். ஒருவேளை அவர்களின் முயற்சியில் வெற்றிகிட்ட நாளாகும் என்று தெரிந்தால் அதை தடுக்கும் விதமாக பேசாதீர்கள். விட்டுப்பிடித்து அவர்களின் வெற்றிக்கான தாமத நேரத்தில் இதை இப்படி செய்திருந்தால் இன்னும் சீக்கிரம் வெற்றியை எட்டிப் பிடித்திருக்கலாம் என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசுங்கள்.
குழந்தைகள் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்களின் படைப்புத்திறன் தனியாக வெளிப்படுவது அந்த மாதிரி நேரத்தில்தான். இதைப் புரிந்து கொண்டு அந்த படைப்புத்திறன் மேலும் மேலும் பெருக, உற்சாகப்படுத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் செய்யும் எந்தவொரு செயலும் அவர்களை மட்டும் சார்ந்ததில்லை. அது சாதகமோ பாதகமோ அதன் பலன் பெற்றோரையும் பாதிக்கும் என்பதை உணர்த்துங்கள். இதை சரியாக உணர்த்தி விட்டீர்களாயின், எந்தவொரு செயலிலாவது சந்தேகம் ஏற்படுமாயின் நிச்சயமாக உங்களை கலந்து பேசி முடிவெடுப்பார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு உரிய தனித்தன்மை உங்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும். அந்த தனிப்பட்ட ஸ்டைலை, உத்தியை மனம் விட்டுப் பாராட்டுங்கள். குழந்தைகள் இன்னும் உற்சாகமாவார்கள்.
அதுமாதிரி படிப்பிலோ, விளையாட்டிலோ, தனித் திறனிலோ அவர்கள் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தும்போது, இதல்லவா பேரின்பம் என்கிற மாதிரி உங்கள் மகிழ்ச்சியை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள்.
பெற்றோர் - பிள்ளைகளிடையேயான இந்த உணர்வுக் கலவைகள் சரியாக அமையுமானால் பெற்றோருக்கும் கவலை இல்லை. பிள்ளைகளும் தனித்த ஆற்றலுடன் உருவாவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உங்கள் குழந்தை எப்படி?, உங்கள், அந்த, குழந்தைகள், அவர்களின், விதமாக, Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி