மழலை பாஷை எப்போது சரியாகும்?

குழந்தைகளைப் பொறுத்தவரை சிலர் வெகு சீக்கிரத்திலேயே பேச ஆரம்பித்து விடுவார்கள். சில குழந்தைகளுக்கு பேச்சு வர இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். அதுபோல குழந்தைகள் பேச ஆரம்பித்ததும் அட்சர சுத்தமாக வார்த்தைகள் வந்து விடாது. ம்மா... ப்பா, மா, என்று தான் அழைக்க தொடங்கும். சில குழந்தைகளுக்கு இந்த வார்த்தைகள் கூட வராமல் ங்கா... ங்கா என்று மழலை பாஷையிலேயே சில காலத்துக்கு பேசிக் கொண்டிருப்பார்கள். இது இயற்கையானது. ஆனால் சில பெற்றோர் இது குறித்து ரொம்பவே கவலைப்படுகிறார்கள். இந்த வயசிலே உள்ள குழந்தைகள் எல்லாம் தெளிவாக பேசுகிறதே, நமது குழந்தை மட்டும் ஏன்? இப்படி இருக்கிறது என்று நினைக்கிறார்கள். இது தேவையற்ற ஒன்று.
பொதுவாக குழந்தைகளின் முதல் வார்த்தைகள் மிக சுருக்கமாக இருக்கும். அது ஓரளவுக்கு அர்த்தம் உள்ளதாகவும் இருக்கலாம். அர்த்தமே இல்லாமலும் இருக்கலாம். குழந்தைகள் குறைந்த பட்சம் 9 மாதத்தில் இருந்து, அதிகபட்சம் 18 மாதங்கள் வரையில் பேச ஆரம்பித்து விடுவார்கள். இதில் கூடுதல், குறைதல் இருக்கலாம். அதற்காக குழந்தை எப்படி பேசுகிறது என்பதை வைத்து அதனுடைய ஆரோக்கியத்தை சொல்ல முடியாது. இருந்தாலும் குழந்தைகளின் பேசும் தன்மை, திறன் எந்தளவுக்கு இருக்கிறது? ஏதாவது பாதிப்பு இருக்கிறதா? என்பதை கண்டறிய உங்களை நீங்களே கீழ்க்கண்டவாறு கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தை பேசும் தனி வார்த்தையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?
வெவ்வேறு விதமான உணர்வுகளில் குழந்தைகள் வெளிப்படுத்தும் வெவ்வேறு விதமான ஒலிகளை பிரித்தறிய முடிகிறதா?
குழந்தையின் கேட்கும் திறனில் ஏதாவது பாதிப்பு இருக்கும் என சந்தேகப் படுகிறீர்களா?
குழந்தையிடம் நிறைய பேசுகிறீர்களா? அல்லது கொஞ்சமாக பேசுகிறீர்களா?
குடும்பத்தில் இதற்கு முன்பு யாராவது தாமதமாக பேசியதாக தெரிய வருகிறதா?
இந்த கேள்விக்கெல்லாம் முதலில் விடை தேடிக் கொள்ளுங்கள். அப்படியும் குழந்தைக்கு பிரச்சினை இருப்பதாக நினைத்தால் மேலும் ஒரு 5 மாதத்துக்கு பொறுத்து இருங்கள். அதன்பிறகும் குழந்தை பேசவில்லை என்றால் உடனடியாக ஒரு குழந்தை மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மழலை பாஷை எப்போது சரியாகும்?, குழந்தை, குழந்தைகள், இருக்கலாம், வார்த்தைகள், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி