குழந்தைகளின் பல் பாதுகாப்பு

- டாக்டர் ஜே. ஜாபர் ரஹமான்
உலக குழந்தைகள் பாதுகாப்பு நிறுவனமான யூனிசெப் அறிவித்துள்ள புள்ளிவிவரப்படி பார்த்தால் நம் பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக பராமரிப்பதில்லை என்ற விவரம் தெரிகிறது. குறிப்பாக குழந்தைகளின் பற் களின் மீது அவர்கள் போதுமான கவனம் செலுத்துவதில்லை.
தொடக்கத்தில் பற்களில் ஏற்படும் சிறிய கருப்பு நிறப்புள்ளிகள் பல்லின் மேல் பகுதியிலோ அல்லது பக்கவாட்டிலோ, பல்லிற்கு நடுவிலோ காணப்படுகிறதா என்று பார்க்கவேண்டும். அப்படி ஏதாவது இருந்தால் அது பற்களின் எனாமலை பாதிக்கக் கூடும். எனவே அதனை முறையாகக் கண்டுபிடித்து பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
அவ்வாறு ஆலோசனை பெறுவதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக அமைவதோடு, வரும் நிலைப்பற்கள் பல் சொத்தையிலிருந்து பாதுகாக்கப் பட்டு, பல்லாண்டுகள் நோயின்றி வாழ்வதற்கும் வழி வகுக்கும்.
பற்சொத்தையினை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து வைத்தியம் செய்யாவிட்டால் சொத்தையானது ஆழமாகச் சென்று பல்லின் நரம்பு பாகத்தினை அடைத்துவிடலாம். அப்பொழுது குழந்தைகளுக்கு தாங்க முடியாத பல் வலியும், தொல்லையும் மற்றும் ஈறு வீக்கமும் ஏற்படலாம்.
எனவே, வலி வந்தவுடன்தான் பல் மருத்துவரை அணுகவேண்டும் என்று இருக்கக்கூடாது. நவீன பல் மருத்துவத் தில் பல்லின் வேர்ப்பகுதிக்கு ரூட் கெனால் எனப்படும் வேர் சிகிச்சை மூலம் பிரச்சினையை சரிசெய்யலாம்.
சொத்தையை கவனிக்காமல் விட்டுவிட்டால் அது நரம்பு பாகத்தை அடைந்த பின்னர் வேரினை அடைந்து முன்னேறிய நிலைக்குப்போகும். உடனே குழந்தை பல்வலி தாங்க முடியாமல் பல்லை அதாவது பால் பல்லை தானாக விழும் காலம் வரும் முன்னே அதை எடுத்துவிடுவதால் அந்த இடம் காலியாக இருக்கும். அதனால் இடைவெளியை நோக்கி வெளியில் பக்கத்துப் பற்கள் சாய்ந்து இடத்தை நிரப்பிக்கொள்ளும். அதனால் பின்னால் முளைக்க வேண்டிய மெய்ப்பற்கள் சரியாக முளைக்க இடம் இல்லாமல் அஷட கோணலாக, சீரமைப்பின்றி, தெற்றுப் பற்களாகவோ, சந்துப் பற்களாகவோ அல்லது முளைக்கா மலோ போய்விட வாய்ப்பு உள்ளது.
நவீன பல் மருத்துவத்தின் மூலம் அப்பற்கள் விழுந்த இடம் காலியாக இருக்கும்போதே ஸ்பேஸ் மெயின்டனர் எனப்படும் பற்சீரமைப்பு கிளிப் உதவி மூலம் அந்த இடைவெளியை பாதுகாக்கலாம்.
இதில் கழற்றி மாட்டக்கூடிய வகையான டிஸ்டல் சூ ஸ்பேஸ் மெய்ன்டைனர் மற்றும் நிலையான கிளிப் பேண்ட் அன்ட் லூப் ஸ்பேஸ் மெயின்டைனர், லிங்குவல் ஆர்ச் ஸ்பேஸ் மெய்ன்டைனர் என பல உள்ளன.
பல்சொத்தையினால் குழந்தைகளுக்கு பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், மற்றும் வாயை திறக்க முடியாமை, சரியாக உணவு உண்ண முடியாமை என பல பிரச்சினைகள் ஏற்பட்டு குழந்தைகள் மெலிந்தும் தனக்குத் தேவையான சத்துப் பொருட்கள் குறைந்தும் போகும்.
பல்லை இழந்துவிட்டு பள்ளிக் கூடம் போகும்போது தாழ்வு மனப்பான்மையும் ஏற்படும். இதனால் அவர்கள் மன னீதியாகவும் பாதிக்கப்படலாம்.
எனவே, பல்லில் பிரச்சினைகள் தோன்றும் முன்பே அதைக் கண்டுபிடித்து உரிய பல் மருத்துவரை அணுகி சீர் செய்துகொள்ளவேண்டும்.
பெற்றோர்களாகிய நாம் அவ்வப்போது குழந்தையின் வளர்ச்சியை மட்டும் உற்று நோக்காமல் நம் குழந்தையின் வாயையும் உற்றுநோக்கினால்தான் குழந்தைகள் பற்களில் பாதிப்பின்றி ஆரோக்கியமாக இருக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குழந்தைகளின் பல் பாதுகாப்பு, மூலம், ஸ்பேஸ், பல்லை, இடம், மருத்துவரை, சரியாக, பல்லின், குழந்தைகள், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி