சுறுசுறுப்புக்கு மன அழுத்தம் குறையும்

விளையாட்டுக்களில் பங்கெடுத்துக் கொள்வது, அல்லது ஏதாவது ஒரு காரியத்தில் சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவற்றின் மூலம் விடலை பருவத்தில் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்று புதிய ஆய்வு சொல்கிறது.
7-வது படிக்கும் குழந்தைகளில் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருந்த குழந்தைகளும், உடல் ரீதியான செயல்பாட்டை அதிகரித்துக் கொண்ட குழந்தைகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவது குறைவாக இருந்தது ஒரு ஆய்வின் போது தெரிய வந்தது. நீண்ட நாள் நடத்தப்பட்ட மற்றொரு ஆராய்ச்சியில் விடலைப் பருவ பையன்களும், பெண்களும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அப்படி இருந்தால் மன அழுத்த பாதிப்பு கணிசமாக குறையும் என்று கண்டுபிடிக்கபட்டு உள்ளது.
விடலைப் பருவ பையன்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் தான் அதிக அளவுக்கு மன அழுத்த பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் கல்வித்திறன் பாதிப்பு, சமுதாயத்தில் தனிமைப்படுத்தப்படுவது, போதை வஸ்துக்களுக்கு அடிமையாதல் தற்கொலை போன்ற பயங்கர பாதிப்புகள் உண்டாகலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சுறுசுறுப்புக்கு மன அழுத்தம் குறையும், சுறுசுறுப்பாக, Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி