ஆரோக்கிய பானம்
முகத்தில் அடிக்கடி கட்டிகள் ஏற்படுகிறது. இது அழகை பாதிக்கிறது. வெளி அழகிற்கு நமது உணவுப் பழக்கமும் ஓர் முக்கியக் காரணமாய் அமைகிறது. ஆகவே நாம் நம் உணவுப் பழக்கத்தை சீராய் அமைத்தல் அவசியம். அதற்கு எளிய முறையில் வீட்டிலேயே இயற்கை முறையில் சத்துள்ள பானம் ஒன்று தயாரிப்பது பற்றி இங்கே...
ஆரோக்கிய பானம்:
கேரட் - 2, பீட்ரூட் - 1, பச்சை கொத்துமல்லி (மண் போக அலம்பி கட் செய்தது) - 1 கப், வெள்ளை முள்ளங்கி - 1, இஞ்சிச் சாறு - 1/2 ஸ்பூன், தேன் - 1 ஸ்பூன், தண்ணீர் - 1/2 தம்ளர்.
முள்ளங்கி, கேரட், பீட்ரூட் இவைகளை நன்றாகக் கழுவி தோல் சீவி, பெரிய துண்டுகளாக நறுக்கவும். கொத்தமல்லியையும் சுத்தம் செய்து, மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி இஞ்சிச்சாறு, தேன் கலந்து பருகவும், மலச்சிக்கல் ஏற்படாது. முகம் பளபளப்பாகும். கட்டிகள் வராது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கூடச் சாப்பிடலாம். முடிந்தால் தினமும் சாப்பிடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரோக்கிய பானம், , Beauty Tips, அழகுக் குறிப்புகள், Ladies Section, பெண்கள் பகுதி