திரை அரங்கில் - சர்தார்ஜி ஜோக்ஸ்

ஒரு சர்தார் சினிமா தியேட்டர்லே மூன்று சீட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்.. இந்தப் பக்கத்து சீட்டுல காலையும் அந்தப் பக்கத்து சீட்டுல தலைக்கு கீழே கையையும் வச்சுக்கிட்டு ஹாயா படுத்திருந்தார்.. பக்கத்து சீட்டுல உக்கார வேண்டியவன் இருட்டுல தட்டுத் தடுமாறிக்கிட்டு வந்து சீட்டைப் பார்த்து பயந்துட்டான்.. மெல்ல சர்தார்கிட்ட சொன்னான்..
"அய்யா.. இது என் சீட்டு.. ஏந்துக்கறீங்களா..? "
"ஹ்ம்ம்..?"
" கொஞ்சம் எழுந்துக்கங்க.. நான் உட்காரணும்."
"ஹும்ம்ம்ம்...!!!"
" இந்த மாதிரி கலாட்டா பண்ணா நான் மேனேஜரைக் கூப்பிடுவேன்.."
அதுக்கும் சர்தார் பதில் சொல்லாம உறுமியே மிரட்டி வெரட்டிட்டாரு.. மேலாளர் வந்தும் கதையாகல.. அவருக்கும் உறுமல்தான் பதில்.. அப்புறம் போன் பண்ண போலீஸ் வந்துடிச்சு..
"எலே.. ஏந்திரிடா..? எங்கேருந்துடா வந்துருக்கே..?"
சர்தார் வலியைப் பொறுத்துக்கொண்டு திணறியபடியே சொன்னார்...
"பால்கனியிலேருந்து....இருட்டுல தடுமாறி மேலேருந்து விழுந்துட்டேன்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...! "
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 89 | 90 | 91 | 92 | 93 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரை அரங்கில் - சர்தார்ஜி ஜோக்ஸ், ", ஜோக்ஸ், jokes, சர்தார்ஜி, பக்கத்து, சீட்டுல, சர்தார், திரை, அரங்கில், நான், பதில், நகைச்சுவை, சிரிப்புகள், இருட்டுல