ஏன் குதிக்கிறாய்? - சர்தார்ஜி ஜோக்ஸ்

தெருவில் நடந்து வந்துக் கொண்டிருந்த சர்தாருக்கு தெரு ஓரத்தில் குதித்துக் கொண்டிருந்த ஒரு ஆளைப் பார்த்ததும் அவனருகில் சென்று பார்க்க ஆர்வம். அந்த ஆள் ரோட்டில் இருந்த மேன்-ஹோல் மூடியின் மீது இருபத்தி மூனு.. இருபத்தி மூனு.. என்று எண்ணிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான்.
சர்தார் ஆர்வம் தாங்காமல் அவனிடம் போய், என்ன விசயம் இருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன் சொன்னான், நான் என்னவென்று சொல்வதைவிட நீயே போய் உள்ளே பார்த்தால் நல்லா தெரியும் என்று சொன்னான். சர்தாரும் குழிக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க உள்ளே இறங்கினார். அவ்வளவுதான், அந்த ஆள் உடனே மேன்-ஹோலை மூடியை போட்டு மூடிவிட்டு அதன் மேல் ஏறி மறுபடியும் குதிக்க ஆரம்பித்துவிட்டான். ஆனால் இந்த முறை இருபத்தி மூனுக்கு பதில், இருபத்திநாலு.. இருபத்திநாலு.. என்று எண்ணத் தொடங்கினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 194 | 195 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏன் குதிக்கிறாய்? - சர்தார்ஜி ஜோக்ஸ், ஜோக்ஸ், சர்தார்ஜி, இருபத்தி, jokes, குதிக்கிறாய், மூனு, போய், உள்ளே, இருபத்திநாலு, மேன், சொன்னான், பார்க்க, நகைச்சுவை, சிரிப்புகள், கொண்டிருந்த, குதித்துக், ஆர்வம், அந்த