கடவுளைத் திருடியவர்கள் - சிரிக்க-சிந்திக்க
அவர்களைத் திருத்த எத்தனையோ முறை முயன்று, தோற்றுப் போனார்கள் பெற்றோர்கள், இருவரையும் ஒரு பாதிரியாரிடம் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்..
பாத்ரியாரை சந்தித்தார்கள், அவர் முதலில் ஒருவனை மட்டும் உள்ளே அழைத்தார், இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில் கடவுள் தண்டிப்பார் என்பதைப் புரிய வைக்கும் முயற்சியாக, ‘கடவுள் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டார்.
அதற்க்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘எங்கே கடவுள் என்பதற்குப் பதில் சொல்’
அவன் விழித்தான்.
‘கடவுள் எங்க இருக்கிறார்ன்னு சொல்லப் போறியா இல்லையா?’
அவன் அழ ஆரம்பித்தான்.
‘சரி. நீ போ. உனது சகோதரனை உள்ளே வரச் சொல்’ என்றார்
அவன் வேகமாக அறையை விட்டு ஓடிப்போய் தனது சகோதரனிடம் சொன்னான். ‘டேய்! இந்த தடவை பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டோம். கடவுளைக் காணோமாம் . நாம்தான் திருடியதாக சந்தேகப்படுகிறார்கள்’ என்று...!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடவுளைத் திருடியவர்கள் - சிரிக்க-சிந்திக்க, ஜோக்ஸ், அவன், jokes, கடவுளைத், சிந்திக்க, திருடியவர்கள், சிரிக்க, சொல்’, ‘கடவுள், நகைச்சுவை, சர்தார்ஜி, உள்ளே, கடவுள்