இவையெல்லாம் யாருடையவை? - சிரிக்க-சிந்திக்க

அதுபோல் சித்ரகுப்தனும் நாக்குகளை மட்டும் அறுத்துக்கொண்டு வந்தான் .
அறுத்த பின்னாலும் ,சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில மரத்துப் போயும் ,சில இருகூறாகப் பிளந்து போயும் இருந்தன .
"இவையெல்லாம் யாருடையவை?" என்று எமன் கேட்டான் .
"பிரபு ! இரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடையது; துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடயது" என்றான் சித்ரகுப்தன் .
"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள் .....?" என்று எமன் கேட்க ,.
"அவர்களுக்கு வோட்டுப் போட்ட மக்களுடையது !" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன் .
- கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதைகளிலிருந்து
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 89 | 90 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இவையெல்லாம் யாருடையவை? - சிரிக்க-சிந்திக்க, ", ஜோக்ஸ், jokes, நாக்குகள், யாருடையவை, இவையெல்லாம், சிரிக்க, சிந்திக்க, போயும், எமன், எல்லாம், சித்ரகுப்தன், சொன்னான், சர்தார்ஜி, மட்டும், அறுத்துக்கொண்டு, நகைச்சுவை