கடி ஜோக்ஸ் 8 - கடி ஜோக்ஸ்

ரமனன் : எங்க வீட்டு நாய் செத்துப்போச்சு . . . என்னால ஜீரணிக்கவே முடியல்ல.
முராரி : அய்யய்ய நீங்க நாயெல்லாம் சாப்பிடுவீங்களா?
-***-
மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
-***-
வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
-***-
ரானி : போஸ்ட் மேனைக் காதலிக்கிறீயே... என்ன சொல்றார் ?
வேனி : ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்கிறார்
-***-
மீசைக்கார் : அந்த நடிகை, இது என்னோட மானப்பிரச்சனை விடமாட்டேன்னு சொல்றாங்களே என்னாச்சி ?
பிட்டுக்கார் : படத்துல அவங்க குளிக்கிற ஸீனை சென்ஸார்ல கட் பண்ணிட்டாங்களாம்
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 8 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, லுங்கி, முதலாளி, சிரிப்புகள், kadi, நகைச்சுவை