கடி ஜோக்ஸ் 77 - கடி ஜோக்ஸ்
நர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா இருக்காங்க ?
நர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம். அதான்.....
-***-
பப்பு தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்று கொண்டிருந்தான். டிராபிக் போலீஸ் கை நீட்டி, நிறுத்த சைகை செய்தார். அப்போது,
பப்பு: கொஞ்சமாவது அறிவிருக்கா? ஏற்கெனவே 3 பேர் இருக்கோம். நாலாவதா நீங்க எங்க உக்காருவீங்க?
-***-
பாபு : இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?
கோபு : நான்கு!
பாபு : இல்லை / 22.
-***-
ஒருவர் : டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது
மற்றொருவர் : டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
-***-
ரமனன் : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
முராரி : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ரமனன் : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
-***-
>
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 77 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, இரண்டும், இல்லை, மட்டும், ரமனன், பாபு, பப்பு, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, நர்ஸ், நீங்க