கடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ்
தளபதி : போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை திறக்கவில்லை?
வீரன் : நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது?
-***-
பூஜா : அவர் ஏன் தூங்கும் போது கண்ணாடி போட்டுக்கிறார்?
ராஜா : அவருக்கு அடிக்கடி லைப்ரரி போற மாதிரி கனவு வருமாம்.
-***-
ஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்
பீன்ஸ் : என்ன செய்றார்?
ஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.
-***-
நண்பர் : என்ன ஜோஸியரே, கிளிக் கூண்டு ரொம்பச் சின்னதாயிருக்கு ?
ஜோசியர் : உள்ளே இருக்கிறது, வெட்டுக்கிளிங்க
-***-
வேலு : நேத்து பல்லே விலக்கலை .. ..
ரமனன் : ஏன் .. ..
வேலு : என் மனைவி பக்கத்திலே இருந்ததால் வாயே திறக்க முடியலை ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 7 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ஜோன்ஸ், வேலு, என்ன, நமது, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், இன்னும்