கடி ஜோக்ஸ் 67 - கடி ஜோக்ஸ்

காதலன் : உனக்கு 5 ரூபாய் தருகிறேன்.. உங்க அக்கா என்ன செய்யறான்னு சொல்றியா.. ?
காதலியின் தம்பி : இன்னும் 5 ரூபாய் சேர்த்துக் கொடு.. எங்க அப்பா உன்னை என்ன செய்யப்போறார்ன்னு சொல்றேன்..!
-***-
தயாரிப்பாளர்: இந்த இயக்குநரை நம்பி காசு போட்டுப் படம் எடுத்தா நிச்சயமா நஷ்டப்பட மாட்டோம்....
நண்பர்: எப்படிச் சொல்றீங்க...?
தயாரிப்பாளர்: படம் ரிலீசாகும் போது பிரச்சினை ஏற்பட்டு, நஷ்டம் வந்துடாமா இருக்க முன்னெச்சரிக்கையா இப்பவே ஷூட்டிங் பாக்க மக்களுக்கு டிக்கெட் கொடுத்து கலெக்ஷனை ஆரம்பிச்சுட்டாரே....
-***-
நண்பர் 1: நேற்று என்னோட கச்சேரிக்கு நீங்க வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன் ?
நண்பர் 2: வரனும்னுதான் நெனைச்சேன் சார், ஆனா அதுக்குள்ள வேற ஒரு கஸ்டம் வந்திருச்சு
-***-
ஏஜமானி : இருபத்தநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம் .. ..
வேலைக்காரி : அதுக்காக என்னை வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா
-***-
நண்பர் 1 : போஸ்ட்மேன் மனைவிக்கு டெலிவரி ஆகியிருக்கு .. .. ?
நண்பர் 2 : அதுக்கென்ன .. .. ?
நண்பர் 1 : குழந்தையோட வெயிட்டுக்கு ஏத்தா மாதிரிதான் ஆஸ்பத்திரிக்கப் பணம் கட்டுவென்னு ஒரே தகராறு பண்றாரு .. ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 67 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, நண்பர், நண்பர், படம், தயாரிப்பாளர், ரூபாய், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, என்ன