கடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ்
ஒருவர் பிச்சைகாரரிடம்
நண்பர் : ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. ?
பிச்சைக்காரன் : நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. .
-***-
இவர் : டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..?
அவர் : ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்...
-***-
மகன் : அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா : ஓன்னுமில்லை
மகன் : பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா : ...............
-***-
காதலன் : கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன்.
காதலி : அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?
காதலன் : உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.
-***-
அம்மா : எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே?
மகன் : முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு நீங்கதானே மம்மி சொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 4 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, மகன், அப்பா, தண்ணீரை, கீழே, காதலன், நகைச்சுவை, kadi, சிரிப்புகள்