கடி ஜோக்ஸ் 37 - கடி ஜோக்ஸ்
டாக்டர் : குழந்தைக்கு தண்ணீர் கொடுக்கறதுக்கு முன்னாடி நல்லா கொதிக்க வெச்சுக் குடுங்க.
ஜோ : ஏன் டாக்டர், குழந்தைகளை அடுப்பில கொதிக்க வைக்கிறது தப்பில்லையா?
-***-
வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா?
பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.
வடிவேல் : ?!?!
-***-
பெரியவர் : எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன் : யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.
-***-
TTR : ஏம்பா... ரயிலில் புகை பிடிக்க கூடாதுன்னு சட்டம் இருக்கு. உனக்குதெரியாதா? எடு 200 ரூபாய்...
பயணி : என்ன சார் இது அநியாயமா இருக்கு...
TTR : என்னப்பா அநியாயம்?
பயணி : ரயிலுக்கு ஒரு சட்டம், எனக்கு ஒரு சட்டமா?
TTR : ??
பயணி : ரயிலே புகை பிடிக்கும் போது அதுக்குள்ளே இருக்கும் நான் மட்டும் புகைபிடிக்க கூடாதா....
-***-
ரமேஷ் : குற்றாலம் அருவியை பற்றிய செய்தியை எதையும் நம்பாதே..... நம்பாதே.....
சுரேஷ் : ஏன் அப்படி?
ரமேஷ் : அது 'ஃபால்ஸ்' நியூசாச்சே.....
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 37 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, பயணி, புகை, நம்பாதே, சட்டம், இருக்கு, புடிச்சிக்கிட்டு, ரமேஷ், எனக்கு, சிரிப்புகள், kadi, நகைச்சுவை, டாக்டர், வடிவேல், கொதிக்க, போலீசு