கடி ஜோக்ஸ் 35 - கடி ஜோக்ஸ்
வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?
பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!
வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்!
பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?
வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…
-***-
சித்தையா : என் மவனை ஏன் வெட்னரி டாக்டர் கிட்டே வைத்தியம் பண்ண கூட்டிப்போறே ?
மாமன்னர் : நீங்கதானே சார் எம் மவன் வாயில்லா ஜீவன்னு சொன்னீங்க !
-***-
கார்த்திக் : தலைவர் வீட்டுல ஆயிரக்கணக்குல செருப்பு இருந்ததுக்கு அதிகாரிங்க கணக்கு கேட்டாங்களாமே .. தலைவர் என்ன சொன்னார் ?
வேல் : வாங்கினா கணக்கு காட்டலாம் , மேடைல வந்து விழுந்த்துக்கெல்லாம் எப்படி கணக்கு காட்டுறதாம்ன்னாராம்
-***-
நண்பர் : நீங்க எடுத்த சஸ்பென்ஸ் படங்கள்லேயே கடைசியா எடுத்ததுதான் ரொம்ப பயங்கர சஸ்பென்ஸ்னு சொல்றீங்களே .. .. ஏன் ?
டைரக்டர் : கடைசிவரைக்கும் கதை என்னன்னு எனக்கே புரியலையே
-***-
வேலு : "என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
பேட்டை மாமா : "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 35 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, வடிவேல், கணக்கு, ", ஸாலரி, ஓட்டை, தலைவர், இருக்கட்டும், சார், பார்த்திபன், சிரிப்புகள், kadi, நகைச்சுவை, ஸ்டார்ட்டிங், ரெண்டாயிரம், ரொம்ப