கடி ஜோக்ஸ் 34 - கடி ஜோக்ஸ்
ரமனன் : சதா வாந்தி வருது டாக்டர்
முராரி : சாதா வாந்தியா... ஸ்பெஷல் வாந்தியா
-***-
குப்பு : உங்க பையன் பேரென்ன?
சுப்பு : ராஜ மார்த்தாண்ட வீரபாண்டிய ராம சுப்பிரமணியம்.
குப்பு : பேர் ஆசை பெரு நஷ்டம் - ன்னு சொல்லுவாங்க தெரியுமா?
-***-
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-***-
ரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.
வேலு : ஏன்?
ரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.
-***-
ரசிகர் : ஏழை குடும்பக் கதை படம்னு சொன்னீங்க படம் ஒரே செக்ஸியா இருக்கே ?
இயக்குனர் : கதாநாயகி துணி வாங்கக்கூட காசு இல்லாம கஷ்டப்படறாங்க.. ..
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 34 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, ரமனன், நர்ஸ், குப்பு, வாந்தியா, நகைச்சுவை, kadi, சிரிப்புகள், டாக்டர்