கடி ஜோக்ஸ் 32 - கடி ஜோக்ஸ்
தொண்டர் 1 : நம்ம தலைவர் தேர்தல்ல நிற்க அவருக்குப் பணம் வேணுமாம் .. .. ..
தொண்டர் 2 : எலெக்ஷன் டெபாசிட் கட்டவா .. .. ?
தொண்டர் 1 : இல்ல .. .. ஜாமீன்ல வெளியே வர பணம் கட்ட .. ..
-***-
காதலி : நேற்று உங்க நண்பர் ராஜுவும் இதே ரோஜாவைக் கொடுத்துதான் ஐ லவ்யூ சொன்னார்.
காதலன் : தப்பு,, தப்பு அது வேற ரோஜாவா இருக்கும். இது இன்னிக்கு எங்க தோட்டத்தில் நானே பறிச்சது.
-***-
நெப்போலியன் : - என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி : - இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
-***-
ஜோ : போன வாரம் போலீஸ் என்னை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
நண்பர் : நீ என்ன தப்பு செய்தே?
ஜோ : கடைக்குப் போய் ஷாப்பிங் செய்தேன்.
நண்பர் : ஷாப்பிங் செய்ததுக்கா உன்னை அரெஸ்ட் பண்ணினாங்க?
ஜோ : ஆமா.. ராத்திரி அவங்க கடையை மூடினப்புறம் ஷாப்பிங் போனேன்.
-***-
ரானி : டெலிவிஷன்லே ஷோபனாரவி எப்பவும் சேலைத் தலைப்பைப்போர்த்திக்கிட்டு தான் செய்தி வாசிப்பாங்க. ஏன் அப்படீ?
வேனி : தெரியாதே!
ரானி : அவங்க வாசிக்கிறது தலைப்பு செய்தியாச்சே!
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 30 | 31 | 32 | 33 | 34 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 32 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தப்பு, நண்பர், தொண்டர், ஷாப்பிங், ரானி, அவங்க, என்ன, அரெஸ்ட், பணம், kadi, சிரிப்புகள், நகைச்சுவை, சர்தார்ஜி