கடி ஜோக்ஸ் 25 - கடி ஜோக்ஸ்
டாக்டர் : தினமும் குளுக்கோஸ் சாப்பிடுங்க
மாயான்டி மாமா : அது கிடைக்கலேன்னா முட்டை'கோஸ்' சாப்பிடலாமா?
-***-
பெண் : பையனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னேனே!
தரகர் : நல்ல இடம், 50 சவரன் போடுறேங்கறா.
பெண் : அப்ப முடிச்சிட வேண்டியது தானே!
தரகர் : அதில் தானே சிக்கல், மாமியார் இல்லாத இடமா வேணுமாம்.
-***-
டாக்டர் வாத்தி : தேள் கொட்டினதுக்கு இப்ப தானே மருந்து வாங்கிட்டு போனிங்க ,மறுபடியும் ஏன் கேக்குறிங்க ?
கோலம் : மருந்து கொட்டிருச்சி டாக்டர் !
-***-
கோபு : வெளியிலே வெயில்லே வந்தா உருகிடற மனுஷர் யாரு?
பாபு : தெரியாதே!
கோபு : பெருமாள் கோவில் பட்டர்.
-***-
தொண்டர் 1 : அரசியல்ல புதுமை பண்ணறதுக்கு ஒரு எல்லையே இல்லை நம்ம தலைவருக்கு .. ..
தொண்டர் 2 : ஏன் .. .. .. ?
தொண்டர் 1 : எந்தக் கட்சியோட கூட்டணி வெச்சுக்கப் போறோம்கற விஷயத்தைத் தேர்தலுக்கப்புறம் அறிவிக்கப் போறாராம்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 23 | 24 | 25 | 26 | 27 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 25 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தானே, தொண்டர், டாக்டர், கோபு, kadi, மருந்து, சிரிப்புகள், பெண், தரகர், நகைச்சுவை