கடி ஜோக்ஸ் 20 - கடி ஜோக்ஸ்

கிராமத்து ஆள் : இந்த ரூமுக்குத் தலைக்கு ஐம்பது ரூபாய் வாடகையா, சார்!
லாட்ஜ் மானேஜர் : ஒரு தலைக்கும் அதே வாடகை தான் : இராவணன் வந்து தங்கினாலும் அதே வாடகை தான்.
-***-
தொண்டர் 1 : இருபது ஸீட்ல ஜெயிச்சா போதும்னு தலைவர் சொல்றாரே ஆட்சியமைக்க அது போதுமா ?
தொண்டர் 2 : ஆட்சியைக் கவிழக்க அது போதுமே
-***-
தொண்டன் 1 : எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
தொண்டன் 2 : எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.
-***-
ரானி : உங்க வேலைக்காரி துணி துவைக்கும் போது கூலிங் கிளாஸ் போட்டுக்கிறாளே!
வேனி : அதுவா அவ உபயோகப்படுத்தறது ஸன்லைட் சோப்பாம்.
-***-
செய்தி - 500 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டுகள் கலப்பு
மகன் : அப்பா .. .. .. கீழே ஒரு ஐந்நூறு ரூபா நோட்டு கெடக்கு .. ..
அப்பா : பேசாம வாடா .. .. கண்ட பேப்பரையெல்லாம் பொறுக்காதே .. .
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடி ஜோக்ஸ் 20 - கடி ஜோக்ஸ், ஜோக்ஸ், jokes, தலைவர், தொண்டன், நெஞ்சுல, அப்பா, தொண்டர், வாடகை, kadi, சிரிப்புகள், நகைச்சுவை, ரூபாய், தான்