முதன்மை பக்கம் » நகைச்சுவை » முட்டாள் சிரிப்புகள் » அரசியல் தலைவர்களும், ரேஷன் கடைகளும் ஓர் அலசல் ரிப்போர்ட்
முட்டாள் சிரிப்புகள் - அரசியல் தலைவர்களும், ரேஷன் கடைகளும் ஓர் அலசல் ரிப்போர்ட்
(அரசியல்வாதிகள்)
தொண்டர் : தலைவரே... நாம ரேஷன் அரிசி பதுக்கி வெச்சிருக்கிறது எப்படியோ தெரிஞ்சுபோய் ரெய்டுபண்ண வந்திருக்காங்க.. இப்ப என்ன பண்றது?
தலைவர் : யோவ்.. எல்லாம் எடைக்கு எடை தொண்டர்கள் கொடுத்ததுன்னு சொல்லுய்யா..
(மேடையில் ஒரு அரசியல்வாதி)
தலைவர் : நீலக்கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே.. அரசு யோசிக்குமா..?
ரேஷன் கடையில்
ஒருவர் : என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
ரேஷன் கடைகாரர் : பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..?
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசியல் தலைவர்களும், ரேஷன் கடைகளும் ஓர் அலசல் ரிப்போர்ட் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -